முகப்பு
ஈரோடு

225 ஊராட்சிகளில் இன்று மே தின கிராம சபைக் கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சிகளிலும் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

ஈரோடு

225 ஊராட்சிகளில் இன்று மே தின கிராம சபைக் கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சிகளிலும் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சிகளிலும் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
 இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வெளியிட்ட தகவல்: மே தினத்தில் (மே 1) நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சிகளில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல்  தடுப்பு, திறந்த, செயலிழந்த ஆழ்துளைக் கிணறுகளைக் கண்டறிந்து விபத்துகள் நிகழ்வதைத் தவிர்ப்பது, மழைநீர் சேகரிக்க கட்டமைப்பு உருவாக்குதல், குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்தல், தூய்மைப் பணி மேற்கொள்ளுதல், திடக்கழிவு, திரவக் கழிவு மேலாண்மை, மரக்கன்றுகள் நடுதல், கிராமப்புறங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றிட நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
 எனவே, பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், மகளிர் மேம்பாட்டுத் திட்ட சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தவறாமல் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சமுதாய கடமையாற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →