பெருந்துறை அருகே தீ விபத்து: சாவு எண்ணிக்கை 3 - ஆக அதிகரிப்பு
பெருந்துறை அருகே நேரிட்ட தீ விபத்தில் காயமடைந்தவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
ஈரோடுபெருந்துறை அருகே தீ விபத்து: சாவு எண்ணிக்கை 3 - ஆக அதிகரிப்பு
பெருந்துறை அருகே நேரிட்ட தீ விபத்தில் காயமடைந்தவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
பெருந்துறை அருகே நேரிட்ட தீ விபத்தில் காயமடைந்தவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
பெருந்துறை, பணிக்கம்பாளையம், மேற்கு காலனியைச் சேர்ந்தவர் தங்கமுத்து. இவருக்குச் சொந்தமான 7 குடிசைகளில் வடமாநில கூலித் தொழிலாளர்கள் வாடகைக்குத் தங்கியுள்ளனர். ஜனவரி 26-ஆம் தேதி நள்ளிரவில் குடிசை வீடுகளில் தீப்பிடித்தது.
இந்த விபத்தில் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த வர்ஷன் மாண்டேல் (46), அவரது மனைவி நொமிதா (40) ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். விபத்தில் பலத்த காயமடைந்த பாருத்தி (45) என்ற பெண் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சனிக்கிழமை இரவு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.