ஈரோடு

நந்தா பொறியியல் கல்லூரியில் திறனறிப் போட்டிகள்

DIN

நந்தா கல்வி நிறுவனங்கள் சார்பில் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நந்தா குழந்தைகள் விழா, பள்ளி மாணவர்களுக்கான  திறனறியும் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
 நந்தா பொறியியல்  கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு,  நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்தார். ஆலோசகர் எஸ்.பி.விஸ்வநாதன், முதன்மை நிர்வாக அலுவலர்  எஸ்.ஆறுமுகம், செயலர்கள் எஸ்.நந்தகுமார் பிரதீப், எஸ்.திருமூர்த்த்தி ஆகியோர் போட்டிகளைத் தொடக்கிவைத்தனர்.
 இதில், மாணவர்களின் பன்முகத் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தனியாகவும், குழுவாகவும் பங்கேற்ற மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
 ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசாக மொத்தம் ரூ. 1 லட்சம் தொகை வழங்கப்பட்டது.
 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நந்தா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள்செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT