முகப்பு
ஈரோடு

ஈரோடு கலைக் கல்லூரியில் சதுரங்க விளையாட்டு சங்கம் தொடக்கம்

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் சதுரங்கக் கழக தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஈரோடு

ஈரோடு கலைக் கல்லூரியில் சதுரங்க விளையாட்டு சங்கம் தொடக்கம்

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் சதுரங்கக் கழக தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் சதுரங்கக் கழக தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
மாணவ, மாணவிகளின் நினைவாற்றலைத் தூண்டவும்,  சிந்தனையை மேம்படுத்தும் நோக்கிலும் நடைபெற்ற இவ்விழாவுக்கு,  கல்லூரி முதல்வர் இரா.வெங்கடாசலம் தலைமை வகித்தார். நாகராஜன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாநில சதுரங்க விளையாட்டுப் பயிற்சியாளர் மற்றும் நடுவர் செந்தில்குமார் பங்கேற்று சதுரங்கக் கழகத்தைத் தொடக்கி வைத்துப் பேசுகையில்,  "சதுரங்க விளையாட்டில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு  உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் மனஅழுத்தத்தை குறைக்க இப்பயிற்சியை பெற்று மாணவ மாணவிகள் பயனடைய வேண்டும்' என்றார்.
கல்லூரி சதுரங்கக் கழகம் மூலம் கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு தனிப்பயிற்சி அளிக்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். பேராசிரியர் பி.சத்யா நன்றி கூறினார்.
 
முழு கட்டுரையைப் படிக்க →