ஈரோடு

மதுரை வீரன் பொங்கல் திருவிழா: மாநில அளவிலான கபடி போட்டி

DIN

மொடக்குறிச்சி அருகே உள்ள கோவில்பாளையம் பழனி ஆண்டவர்குன்று மதுரைவீரன் திருக்கோவில் பொங்கல் விழாவில் மாநில அளவிலான ஆடவர் கபடி போட்டி நடைபெற உள்ளது.
மொடக்குறிச்சி அருகே உள்ள கோவில்பாளையம் பழனிஆண்டவர் குன்றுப் பகுதியில் பிரசித்திபெற்ற மதுரைவீரன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் திருவிழா ஆண்டு தோறும் ஆனி மாதம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு திருவிழா கடந்த 27ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை காலை பக்தர்கள் விநாயகர்பூஜை செய்து மதுரைவீரன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து காவிரிக் கரைக்கு தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மறுபூஜையுடன் விழா நிறைவு பெற்றது. பழனி ஆண்டவர்குன்று பாலு சகோதரர்கள் கபடி குழுவினர் நடத்தும் மாநில அளவிலான கபடி போட்டி சனிக்கிழமை இரவு தொடங்கியது. இதில், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கோவை, ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட கபடி அணிகள் கலந்துகொள்கின்றன. இப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது.
வெற்றிபெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ. 11 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 7ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 5ஆயிரம், நான்காம் பரிசாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும். அனைத்து அணிகளுக்கும் சுழற்கோப்பைகள் வழங்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT