சுற்றுலாப் பேருந்து அதிபர் விபத்தில் சாவு
பெருந்துறை அருகே நேரிட்ட சாலை விபத்தில் சுற்றுலாப் பேருந்து உரிமையாளர் உயிரிழந்தார்.
பெருந்துறை அருகே நேரிட்ட சாலை விபத்தில் சுற்றுலாப் பேருந்து உரிமையாளர் உயிரிழந்தார்.
பெருந்துறையை அடுத்த சீனாபுரம், சூரநாயக்கனூரைச் சேர்ந்தவர் குமார் (45), சுற்றுலாப் பேருந்து உரிமையாளர். இவர், தனது நண்பர் பாக்கியராஜுடன் (40) இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை மதியம் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
பெருந்துறையை அடுத்த சீனாபுரம், திங்களூர் சாலை, மாரநாயக்கனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, குமார் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார். இது குறித்து, போலீஸார் விசாரிக்கின்றனர்.