முகப்பு
ஈரோடு

திமுக தெருமுனைப் பிரசாரம்

மொடக்குறிச்சி ஒன்றிய திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு, அவல்பூந்துறை, லக்காபுரம் ஆகிய இடங்களில் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

மொடக்குறிச்சி ஒன்றிய திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு, அவல்பூந்துறை, லக்காபுரம் ஆகிய இடங்களில் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது. 
இப்பிரசாரத்துக்கு, ஒன்றிய கழகச் செயலாளர் குணசேகரன் தலைமை வகித்தார். தலைமைக் கழகப் பேச்சாளர் பவானி கண்ணன் கலந்துகொண்டு மார்ச் 24, 25 நடைபெற இருக்கும் ஈரோடு மண்டல மாநாட்டில் பொதுமக்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று பேசினார். இதில், மாநில நெசவாளரணி செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் சண்முகம், பேரூர் கழகச் செயலாளர் சண்முகசுந்தரம், முன்னாள் ஊராட்சித் தலைவர் பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →