முகப்பு
ஈரோடு

பள்ளி வேன் கவிழ்ந்து மாணவர்கள் காயம்

அறச்சலூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

அறச்சலூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.
அறச்சலூர் அருகே பழையகோட்டை சகாயபுரம் பகுதியில் ஆண்டனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் வேன் புதன்கிழமை மாலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு சில்லாங்காட்டுப்புதூர் அருகே சென்றபோது திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.  
இதில், தர்மராஜ் (10), சங்கீத் (10), லோகேஷ் (8) உள்ளிட்டோர் பலத்த காயமடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். தகவலறிந்த அறச்சலூர் காவல் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் மாணவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த விபத்து குறித்து வேலாங்குட்டை பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் ஈஸ்வரனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →