மாநில அறிவுத் திறன் போட்டி: பாரதி வித்யாலயா பள்ளி சிறப்பிடம்
மாநில அறிவுத் திறன் போட்டியில், கோபி பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.
ஈரோடுமாநில அறிவுத் திறன் போட்டி: பாரதி வித்யாலயா பள்ளி சிறப்பிடம்
மாநில அறிவுத் திறன் போட்டியில், கோபி பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.
மாநில அறிவுத் திறன் போட்டியில், கோபி பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.
ஜேசி சங்கம் சார்பில் பொது அறிவுத் திறன் போட்டித் தேர்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்வில் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த 63 பேரும், சிபிஎஸ்இ பள்ளியைச் சேர்ந்த 94 பேரும் கலந்துகொண்டு தேர்வு எழுதினர்.
இதில், கோபி பாரதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர் மெளன நிகிலேஷ் மாநில அளவில் 2-ஆவது இடத்தையும், மாவட்ட அளவில் மூன்றாவது இடத்தையும் பெற்றார். முதலாம் வகுப்பு பயிலும் மாணவர் அக்ஷத் மாவட்ட அளவில் 2-ஆவது இடத்தையும், 3-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஹர்சித்ராம் மாவட்ட அளவில் 2-ஆவது இடத்தையும் பெற்றனர்.
சிபிஎஸ்இ பள்ளியில் முதலாம் வகுப்பு பயிலும் மாணவி ஸ்ரீ சக்தி மாநில அளவில் 2-ஆம் இடமும், மாவட்டத்தில் முதலிடமும், மாணவி ஆதிரா மாநில அளவில் 3-ஆவது இடமும், மாவட்ட அளவில் 2-ஆவது இடத்தையும், சுகிஷ்ணு மாநில, மாவட்ட அளவில் 3-ஆவது இடத்தையும் பெற்றனர். இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி கனிஷ்கா மாநில, மாவட்ட அளவில் 3-ஆவது இடத்தையும், முதலாம் வகுப்பு பயிலும் மாணவர் சிவேஷ் மாவட்டத்தில் 2-ஆவது இடமும், 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஹரிணி மாவட்டத்தில் 3-ஆவது இடத்தையும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், ஊக்குவித்த ஆசிரியை மனிஷாஅகர்வால் ஆகியோரையும் பாரதி வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தாளாளர் பி.ஆர்.வேலுமணி, பள்ளி துணைத் தாளாளர் அமுதம், ஆசிரியர்கள் பாராட்டினர்.