ரயில்வே தேர்வு: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசப் பயிற்சி
ரயில்வே தேர்வு வாரியத்தின் மூலமாக நடைபெறவுள்ள தேர்வுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாகப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ரயில்வே தேர்வு வாரியத்தின் மூலமாக நடைபெறவுள்ள தேர்வுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாகப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வெளியிட்ட செய்தி:
ரயில்வேயில் காலியாக உள்ள 89 ஆயிரத்து 409 காலிப் பணியிடங்களைப் பூர்த்தி செய்வதற்காக நேரடி எழுத்துத் தேர்வு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வுகளுக்கு மார்ச் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களைத் தயார் செய்து கொள்ள ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. மேலும், தேர்வுக்குத் தேவையான பாடக் குறிப்புகள் வினா, விடைகளும் நகலெடுத்து அளிக்கப்படவுள்ளது.
இதில், கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்ப நகல், கல்விச் சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகிவற்றின் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தன்னார்வப் பயிலும் வட்டத்தை உடனே அணுகலாம் என்றார்.