ரூ. 5.97 லட்சத்துக்கு வேளாண் பொருள்கள் ஏலம்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 5.97 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 5.97 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இங்கு, 24,052 தேங்காய்கள் விற்பனைக்கு வந்ததில், சிறியவை ரூ. 6 முதல் பெரியவை ரூ. 16 வரையில் மொத்தம் ரூ. 2,46,889-க்கும், 78 மூட்டைகள் தேங்காய் கொப்பரை கிலோ ரூ. 102.79 முதல் ரூ. 118.89 வரையில் ரூ. 2,63,692-க்கும், 44 மூட்டைகள் மக்காச்சோளம் கிலோ ரூ. 13.36 முதல் ரூ. 13.52 வரையில் ரூ. 54,227-க்கும், 14 மூட்டைகள் எள் கிலோ ரூ. 63.39 முதல் ரூ. 73.29 வரையில் என மொத்தம் ரூ. 32,560-க்கு ஏலம் போனது. மொத்தம் 136 மூட்டைகளில் 230.36 குவிண்டால் வேளாண் விளைபொருள்கள் ரூ. 5,97,368-க்கு விற்பனை செய்யப்பட்டது.