ம.பி. படகு விபத்து! குடியரசுத் துணைத் தலைவர் இரங்கல்!
மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்த படகு விபத்துக்கு, குடியரசுத் துணைத் தலைவர் இரங்கல் தெரிவித்தது தொடர்பாக...
மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்த படகு விபத்துக்கு, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூா் மாவட்டத்தில் உள்ள அணையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகினர்.
ஜபல்பூா் மாவட்டத்தில் உள்ள நா்மதை ஆற்றில் பா்கி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் வியாழக்கிழமை (ஏப்.30) மாலை சுற்றுலாப் படகு சவாரியில் 29 போ் சென்றனர். எதிா்பாராதவிதமாக பலத்த சூறைக்காற்று வீசியதில் படகு நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Advertisement
Advertisement
இதில் பலியான 9 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன 5 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அந்த மாநில அமைச்சர் ராகேஷ் சிங் தெரிவித்திருந்தார்.
இந்தச் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ் தளத்தில், “ மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் படகு கவிழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் மிகுந்த வேதனை அடைகிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இந்தத் துயர நேரத்தில் அவர்களுக்கு மன தைரியமும் வலிமையும் கிடைக்கவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் நான் வேண்டுகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
Vice President C.P. Radhakrishnan has expressed condolences over the boat accident that occurred in Madhya Pradesh.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.