ஈரோடு

ஈரோடு ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு அமைக்கும் பணிகள் தீவிரம்

DIN

ஈரோடு ரயில் நிலையத்தில் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சுமார் ரூ. 3 கோடி மதிப்பில் நகரும் படிக்கட்டுகள் நிறுவும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஈரோடு ரயில் நிலையத்தில் 4 நடைமேடைகள் உள்ளன. இந்த நடைமேடைகளுக்கு நுழைவுவாயில் வழியாகப் படிக் கட்டுகளில் ஏறிச் சென்று வருகின்றனர். முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் மிகுந்த சிரமத்தையும் பொருள்படுத்தாமல்
படிக்கட்டில் ஏறிச் செல்கின்றனர். இதை ஓரளவு குறைக்கும் நோக்கில் 1 மற்றும் 2 -ஆவது நடைமேடைக்கும், 3 மற்றும் 4 -ஆவது நடைமேடைக்கும் பொதுவான பகுதியில் 2 மின்தூக்கிகள் (லிப்ட்) அமைக்கப்பட்டன. ஆனால், போதிய பராமரிப்பின்றி நாளடைவில் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் பயணிகள் தங்களது சுமைகளுடன் மீண்டும் படிக்கட்டு வழியாகச் சிரமப்பட்டு தூக்கிச் செல்லும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிற ரயில்நிலைங்களைப் போல ஈரோடு ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் அமைக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், மந்தநிலையே நீடித்து வந்தது. ஒரு கட்டத்தில் பணிகள் நின்றே போனது. இதையடுத்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. தொடர்ந்து நகரும் படிக்கட்டுகள் நிறுவும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்தினர் கூறியதாவது: ஈரோடு ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் விரைவில் முடிவடைந்ததும் பயணிகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற நடத்துநா் வீட்டில் 35 பவுன் நகைகள் திருட்டு: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையத்தில் ஐஜி ஆய்வு

ராமன்தொட்டி கிராமத்தில் எருதுவிடும் விழா தொடங்கி வைப்பு

ஒசூரில் 8 ஆயிரம் ஹெக்டோ் நிலப்பரப்பில் பயிா் சாகுபடி

ரேஷன் அரிசி கடத்திய வழக்கு: குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது

SCROLL FOR NEXT