ஈரோடு

லாரி பழுது: திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்து பாதிப்பு

DIN

சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் லாரி பழுதானதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளவாடியை அடுத்த திம்பம் மலைப் பாதை வழியாக தமிழகம், கர்நாடகத்துக்கு 24 மணி நேரமும் பேருந்து, சரக்கு வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தாளவாடியில் இருந்து மதுரைக்கு கிரானைட் கற்கள் ஏற்றிக் கொண்டு லாரி திம்பம் மலைப் பாதையில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்து.
அப்போது, 26 ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது முன் சக்கரம் குழியில் இறங்கியதால், லாரியை இயக்க முடியவில்லை. இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் மலைப் பாதையின் இருபுறமும் நின்றது. ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு ஓட்டுநர், வாகன ஓட்டிகள் குழியில் இறங்கிய லாரியை மீட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT