முகப்பு
ஈரோடு

ஈரோட்டில் மனைவி நல வேட்பு விழா

ஈரோடு உலத சமுதாய சேவா சங்கம் சார்பில் மனைவி நல வேட்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 6:53 AM
பகிர்:

ஈரோடு உலத சமுதாய சேவா சங்கம் சார்பில் மனைவி நல வேட்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு, மல்லிகை அரங்கில், உலக சமுதாயா சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில், சென்னையைச் சேர்ந்த அருள்பிரகாஷ் பங்கேற்று "பெண்ணின் பெருமைகள்' என்ற தலைப்பில் பேசினார்.  முதுநிலை பேராசிரியர் எம்.சதாசிவம் அறிமுகவுரையாற்றினார்.
இதில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட கணவர்கள் தங்களது மனைவிக்கு மலர் கொடுத்தும், மனைவியர் கணவருக்கு கனி கொடுத்தும் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். இதில், சிறப்புத் தம்பதிகளாக செளபாக்யா நிறுவனங்களின் தலைவர் ராஜேந்திரன், வேதாத்ரி பதிப்பக நிறுவனர் சதாசிவம், டிப்டாப் நிறுவனங்களின் தலைவர் குமரவேல், விக்னேஸ்வரா ஏஜன்சீஸ் அசோகன், ராகவேந்திரா டை கெம் சண்முகசுந்தரம் தம்பதியர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.