முகப்பு
ஈரோடு

ரேஷன் அரிசி கடத்த முயற்சி: மூவர் கைது; 11 டன் அரிசி பறிமுதல்

கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற மூவரை சனிக்கிழமை இரவு கைது செய்த போலீஸார், அவர்கள் பதுக்கி வைத்திருந்த

Updated On : 3 செப்டம்பர், 2018 at 6:52 AM
பகிர்:

கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற மூவரை சனிக்கிழமை இரவு கைது செய்த போலீஸார், அவர்கள் பதுக்கி வைத்திருந்த 11 டன் அரிசியையும், 5 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டத்திலிருந்து கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஈரோடு உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீஸார் ஈரோடு- சேலம் மாவட்ட எல்லையான கச்சேரி பகுதியில்  சோதனை மேற்கொண்டனர்.
அப்பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்த போலீஸார், அங்கிருந்த மூவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள், பவானி- தேவபுரத்தைச் சேர்ந்த டைனிதாமஸ் (40), தினேஷ்குமார் (30), சேலம் மாவட்டம்- குமாரமங்கலம், வினோபாஜிநகரை சேர்ந்த பிரசாந்த் (28) ஆகியோர் என்பதும்,  ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கர்நாடக மாநிலத்துக்குக் கடத்த முயன்றதும் தெரியவந்தது.  
3 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 11 டன் ரேஷன் அரிசி, கடத்தலுக்குப் பயன்படுத்திய 3 மினி லாரிகள், 2 சரக்கு ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜேஷ் தலைமறைவாக உள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.