ஈரோடு

ஈரோட்டில் உலக நன்மைக்காக காயத்ரி தேவி வீதி உலா

DIN

ஈரோடு, காரைவாய்க்கால் சுயம்பு நாகர் ஆலயத்தில் விஸ்வகர்மா அமைப்பு சார்பில், உலக நன்மைக்காக காயத்ரி தேவி திருவீதி உலா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஐந்தொழில்கள் சிறப்பாக அமையவும், ஐந்தொழிலாளர்கள் ஒற்றுமைக்கும், உலக நன்மைக்கும், உலக அமைதி வேண்டியும், மானசாந்தி கிடைக்கவும், ஈரோடு காரைவாய்க்கால், சுயம்பு நாகர் ஆலயத்தில் விஸ்வகர்மா அமைப்பு சார்பில் ஆண்டுதோறும்  சிறப்பு விஸ்வகர்மா, காயத்ரி தேவி வழிபாடு நடத்தப்படுகிறது.
 அதன் தொடர்ச்சியாக, நடப்பு ஆண்டில் செவ்வாய்க்கிழமை காலை 7 முதல் 11 மணி வரை மஹா யாக வேள்வியும், தொடர்ந்து இரவு 7 மணிக்கு நடைபெற்ற விஸ்வகர்மா, காயத்திரி தேவி திருவீதி உலாவின்போது திரளான  பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். காரைவாய்க்காலில் தொடங்கிய திருவீதி உலா, கச்சேரி வீதி, மண்டபம் வீதி, பெரியார் வீதி வழியாக வந்து கோயிலில் நிறைவடைந்தது.
இதில், விஸ்வகர்மா மக்கள், பக்தர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT