ஈரோடு மகிமாலீஸ்வரர் கோயில் சித்திரைத் தேரோட்டம் வரும் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஈரோடு திருவேங்கடசாமி வீதியில் பிரசித்தி பெற்ற மகிமாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை சதய தேர்த் திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 21ஆம் தேதி துவங்கியது. அதைத் தொடர்ந்து அப்பர், விநாயகர் புறப்பாடு 23 ஆம் தேதி நடைபெற்றது. சந்திரசேகரர் காமதேனு வாகனத்தில் புறப்பாடும், பல்லவன் சரணாகதி நிகழ்ச்சியும் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
தண்ணீர் பந்தல் திருநாள் வியாழக்கிழமையும், கட்டமுது திருநாள் வெள்ளிக்கிழமையும், அப்பர் கயிலை காட்சி, திருக்கல்யாணம், இந்திர வாகனத்தில் திருவீதி உலா ஆகியவை 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் வரும் 29ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. அன்று மாலை ஒளி வழிபாடும், அப்பருக்கு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.