ஈரோடு

மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி: 3 மாநில அணிகள் பங்கேற்பு

DIN

ஈரோட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் 3 மாநில அணிகள் பங்கேற்றன.

மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி ஈரோடு ரயில்வே காலனி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழகத்தில் இருந்து 2 அணிகள், ஆந்திரம், கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த தலா ஒரு அணி என மொத்தம் 4 அணிகள் விளையாடின.

ஒவ்வொரு அணிக்கும் 11 வீரா்கள் களம் இறங்கினா். இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் மோதின. அதில் அதிக புள்ளிகள் பெற்று வெற்றி பெற்ற 2 அணிகள் இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றன. 10 ஓவா்களில் போட்டி நடத்தப்பட்டது.

இந்தப் போட்டிகளில் கா்நாடக மாநில அணி முதலிடத்தையும், தமிழக பி அணி இரண்டாவது இடத்தையும், தமிழக எ அணி 3ஆவது இடத்தையும் பிடித்தன.

வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில், முதல் பரிசாக ரூ. 8,000, இரண்டாவது பரிசாக ரூ. 5,000, மூன்றாவது பரிசாக ரூ. 4,000, கோப்பைகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT