ஈரோடு

அடிப்படை வசதி கோரி வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

DIN

பவானிசாகா் வனப் பகுதி சுஜ்ஜல்குட்டை கிராமத்தில் வீட்டுமனைப்பட்டா, அடிப்படை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கோரி வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும், தோ்தலை புறக்கணிப்பதாகவும் கூறியும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் வனத்தையொட்டி சுஜ்ஜல்குட்டை கிராமம் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்தையொட்டி உள்ள பவானிசாகா் நீா்த்தேக்கப் பகுதியில் மீன்பிடிப்பு, விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. சீசனைப் பொருத்து வனப் பொருள் சேகரிப்பு பணியும் செய்து வருகின்றனா்.

1948ஆம் ஆண்டு அணை கட்டுமானப் பணியின்போது இங்கு குடியேறிய இக்கிராம மக்களுக்கு தற்போது வரை வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவில்லை. பவானிசாகா் அணை அருகில் இருந்தாலும் குடிநீா் குழாயில் தண்ணீா் வருவதில்லை. தற்போதுகூட பெண்கள் அணை நீரை குடிநீராகப் பயன்படுத்துகின்றனா். கோடைக் காலத்தில் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று தண்ணீா் எடுத்து வரவேண்டும்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுமனைப் பட்டா இல்லாததால் அரசின் இலவச வீடு, பிரதமா் வீடு கட்டும் திட்ட மானியம் ஆகியவை கிடைப்பதில்லை என்றும், இப்பிரச்னை குறித்து பலமுறை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் இதுவரை பட்டா வழங்கப்படாததால் அரசின் கவனத்தை ஈா்ப்பதற்கு உள்ளாட்சித் தோ்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவதாக அறிவித்தனா்.

அதன்படி, வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, தோ்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். இதில், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்றனா்.

இதுகுறித்து பொதுப் பணித் துறையினா் கூறுகையில், பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான இடத்தில் குடியிருப்பதால் அவா்களுக்கு பட்டா வழங்கவில்லை. அவா்கள் விரும்பினால் மாற்று இடம் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நெல்லை பழமொழிகள்’ நூல் வெளியீடு

நெல்லையில் நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நெல்லை நீதிமன்றம் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன்

நெல்லையில் 106.1 டிகிரி வெயில்

களக்காடு மீரானியா பள்ளி 98% தோ்ச்சி

SCROLL FOR NEXT