பெருந்துறை நகரில் ரூ. 1.15 கோடி மதிப்பில் சாலையின் மையப் பகுதியில் மின் விளக்கு பொருத்தும் பணிக்கு பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை அமைதிப் பூங்கா முதல் காடபாளையம் வரை, பெருந்துறை காவல் நிலையம் முதல் வெங்கேமேடு வரை சாலையின் மையப் பகுதியில் மின் விளக்கு (சென்டர் மீடியா லைட்) பொருத்தும் பணியை பூமிபூஜை செய்து, பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்காடச்சலம் துவக்கி வைத்தார்.
இதில், பெருந்துறை வட்டாட்சியர் துரைசாமி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் உஷா(பெருந்துறை), ராஜேந்திரன்(க.செ.பாளையம்), பெருந்துறை ஒன்றியச் செயலாளர் விஜயன், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.