ஈரோடு

சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து ரயில் மூலம் வந்த 3,500 டன் அரிசி

சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் 3,500 டன் புழுங்கல் அரிசி ஈரோட்டுக்கு திங்கள்கிழமை கொண்டுவரப்பட்டது. 

DIN

சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் 3,500 டன் புழுங்கல் அரிசி ஈரோட்டுக்கு திங்கள்கிழமை கொண்டுவரப்பட்டது. 
தமிழகத்திலுள்ள நியாய விலைக் கடைகளில் பயனாளிகளுக்கு இலவச புழுங்கல், பச்சரிசி வழங்கப்படுகிறது. மத்திய தொகுப்பில் இருந்து புழுங்கல் அரிசி, பச்சரிசி ஆகியவை  மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  இதற்காக, வாணிபக்கழக அதிகாரிகள் வட மாநிலங்களில் முகாமிட்டு  அரிசியின் தரத்தை உறுதிசெய்தபின், அதைக் கொள்முதல் செய்து சரக்கு ரயில்களில் ஏற்றி அனுப்பி வைக்கின்றனர். அதன்படி, ஈரோடு மாவட்டத்துக்கு   சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்டத்திலிருந்து  பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிப்பதற்காக 3,500 டன் புழுங்கல் அரிசி  மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் 54 பெட்டிகளில் ஈரோடுக்கு திங்கள்கிழமை  கொண்டுவரப்பட்டது. இதையடுத்து அரிசி மூட்டைகளை லாரிகள் மூலம் மூலப்பாளையம்,  பவானி சாலையிலுள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.  அங்கிருந்து, ஈரோடு மாவட்டத்தில்  இயங்கி வரும்  அனைத்து நியாயவிலைக்  கடைகளுக்கும் பிரித்து விநியோகிக்கப்படவுள்ளதாக நுகர்பொருள் வாணிபக்கழக  அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

காளையாா்கோவிலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சமாதானப் பேச்சுக்கு வாய்ப்பில்லை

SCROLL FOR NEXT