ஈரோடு

ஈங்கூரில் குடிநீர் மேலாண்மை கருத்தரங்கு

DIN

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும், அஸ்வத் தொண்டு நிறுவனமும் இணைந்து சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட ஈங்கூர் ஊராட்சியில் கிராம ஊராட்சி  டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு நாள் குடிநீர் மேலாண்மை பற்றிய பயிற்சி முகாமை திங்கள்கிழமை நடத்தினர்.
முகாமுக்கு அஸ்வத் தொண்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் செல்வராஜ் தலைமை வகித்தார். ஈங்கூர் ஊராட்சிச் செயலாளர் சிதம்பரம் முகாமை தொடங்கி வைத்து கையேட்டினை வெளியிட்டார். 
இதில், சமூக சேவகர் கதிர்வேல் உள்பட பலர் கருத்துரை நிகழ்த்தினர். இந்தக் கருத்தரங்கில், தண்ணீர் சிக்கனம், சுகாதாரமான குடிநீர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT