ஈரோடு

கோயில் செயல் அலுவலர் பணிக்கான தேர்வு:  1,718 பேர் பங்கேற்பு

DIN


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம்  நடைபெற்ற கோயில் செயல் அலுவலர் பணிக்கான தேர்வில் மாவட்டத்தில் 1,718 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்து சமய  அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் செயல் அலுவலராகப் பணியாற்றுவதற்கான கிரேடு- 3, கிரேடு- 4 பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. கிரேடு 3இல் காலியாக உள்ள 55 பணியிடங்களுக்கும், கிரேடு 4இல் காலியாக உள்ள 65 பணியிடங்களுக்கும் ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். இதில் கிரேடு 3க்கான தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. 
ஈரோடு மாவட்டத்தில் இத்தேர்வினை ஈரோடு, பெருந்துறை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 11 மையங்களில் எழுத 3,097 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 1,718 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 1,379 பேர் தேர்வு எழுதவில்லை. 55.5 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

SCROLL FOR NEXT