ஈரோடு

நகைக் கடையில் கொலுசு திருடிய ஊழியர் கைது

DIN

ஈரோட்டில் நகைக் கடையில் வெள்ளிக் கொலுசு திருடிய புகாரின்பேரில்  கடையின் அலுவலரை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு, ஆர்.கே.வி. சாலையில் உள்ள பிரபல தனியார் நகைக் கடையில் வெள்ளி நகைக்கென தனி பிரிவு உள்ளது. வெள்ளி நகைப் பிரிவில் 3 மாதத்துக்கு ஒருமுறை நகைகள்  கணக்கு பார்ப்பது வழக்கம். அண்மையில் வெள்ளி நகைப் பிரிவில் நகைகள் கணக்கு வழக்குப் பார்த்தபோது, கொலுசு பிரிவில் 3 க்கும் மேற்பட்ட  ஜோடி கொலுசுகள், வெள்ளி நகைகள்  கணக்கில் வராமல் இருந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் ஈரோடு நகர் போலீஸார் நடத்திய விசாரணையில், வெள்ளி நகை பிரிவு மேலாளராகப் பணியாற்றிய ஈரோடு, கிருஷ்ணம்பாளையம், ராமமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த மஸ்தான் மகன் சிராஜுதீன் (27) திருடிச் சென்றது தெரியவந்தது.  இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார்  சிராஜுதீனை வியாழக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த ரூ. 27ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிக் கொலுசு, வெள்ளிச் சிலை, நகைகளை  பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றியது மத்திய அரசு: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

நாளைமுதல் ‘அக்னி’ வெயில்

ஜம்மு-காஷ்மீா்: பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லா வேட்பு மனுத் தாக்கல்

மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா

ரூ. 2,000 கோடி பிணையப் பத்திரம் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT