ஈரோடு

கோபி தொகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி துவக்கம்

கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதி உள்பட்ட  1,26,565 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக  தலா ரூ.1000 வீதம் ரூ.12.55 கோடி வழங்கப்படுகிறது.

DIN

கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதி உள்பட்ட  1,26,565 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக  தலா ரூ.1000 வீதம் ரூ.12.55 கோடி வழங்கப்படுகிறது.
 கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குள்ளம்பாளையம், கோபி, கரட்டடிபாளையம், பெரிய கொடிவேரி, கெட்டிச்செவியூர் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில், திருப்பூர் மக்களவை உறுப்பினர் சத்யபாமா முன்னிலையில்  5,791 குடும்ப அட்டைதாரர்களுக்கு    தமிழ்நாடு அரசின் விலையில்லா வேட்டி, சேலை,  விலையில்லாப் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ.1,000 ரொக்கம் ஆகியவற்றை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
 கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத் தலைவர் எஸ்.ஆர்.சந்திரசேகரன், கோபி கோட்டாட்சியர் ஆ.அசோகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் எஸ்.பார்த்திபன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயராமன், சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன், நம்பியூர் அதிமுக ஒன்றியச் செயலாளர் தம்பி சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT