முகப்பு
ஈரோடு

அதிக பாரம் ஏற்றும் சரக்கு லாரிகளைக் கட்டுப்படுத்த ஆசனூரில் தடுப்புக் கம்பம் அமைப்பு

ஆசனூரில் அதிக பாரம் ஏற்றும் சரக்கு லாரிகளைக் கட்டுப்படுத்த தடுப்புக் கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Updated On : 24 ஜனவரி 2019, 12:24 am IST
பகிர்:

ஆசனூரில் அதிக பாரம் ஏற்றும் சரக்கு லாரிகளைக் கட்டுப்படுத்த தடுப்புக் கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களால் விபத்து ஏற்பட்டு சாலையில் கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதைத் தடுப்பதற்கு பண்ணாரி சோதனைச் சாவடியில் அரசு நிர்ணயிக்கப்பட்ட உயரம், அகலம் கொண்ட தடுப்புக் கம்பம் அமைக்கப்பட்டது.
அதேபோல, கர்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்களைக் கட்டுப்படுத்த ஆசனூர் சோதனைச் சாவடியில் வேகம், உயரம், எடையைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்புக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. 13 அடிக்கு பாரம் 
ஏற்றிச் செல்லும் லாரிகள்  தடுப்புக் கம்பம் வழியாக அனுமதிக்கப்படும். தடுப்புக் கம்பத்துக்கு மேல் அதிக பாரம் ஏற்றும் லாரிகள் திருப்பி அனுப்பப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.