முகப்பு
ஈரோடு

சிவகிரி அருகே ரூ.1 கோடி செலவில் புதிய தார் சாலை

கொடுமுடி அருகே உள்ள சிவகிரி பேரூராட்சிக்கு உள்பட்ட 1 ஆவது வார்டு அம்மன்கோவிலில் இருந்து எல்லப்பாளையம்

Updated On : 23 ஜனவரி 2019, 5:30 am IST
பகிர்:

கொடுமுடி அருகே உள்ள சிவகிரி பேரூராட்சிக்கு உள்பட்ட 1 ஆவது வார்டு அம்மன்கோவிலில் இருந்து எல்லப்பாளையம் வரை  நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ. 1 கோடி செலவில் புதிய தார் சாலை அமைப்பதற்கான திட்டப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்நிகழ்ச்சியை, மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினர் சிவசுப்பிரமணி தலைமை வகித்து தொடக்கி வைத்தார். கொடுமுடி அதிமுக  ஒன்றியச் செயலாளர் புதூர் கலைமணி, நகரச் செயலாளர் 
ராமலிங்கம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் சர்வேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் மணிகிருஷ்ணன், சண்முகம், தொடக்க 
வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் தலைவர் பராசக்தி தேவராஜன் உள்ளிட்டோர் 
கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.