ஈரோடு

மாவட்ட அளவிலான கபடி போட்டி: கோபி பிகேஆர் கல்லூரி இரண்டாமிடம்

DIN

மாவட்ட அளவிலான கபடி போட்டியில் கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரி அணி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 
மாநில அளவில் மகளிருக்கான கபடி போட்டி கோவில்பட்டியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை, கோவை, ஒட்டன்சத்திரம், திருப்பூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட பல்வேறு 16 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இந்தப் போட்டிகள் லீக் முறையில் நடத்தப்பட்டன. 
இறுதிப்போட்டி சென்னை பிடிகே அணியும், கோபி பிகேஆர் மகளிர் கலைக் கல்லூரி அணியும் மோதியது. இதில் சென்னை அணி 37-24 என்ற புள்ளிக்கணக்கில் கோபி பிகேஆர் அணியை வென்று சாம்பியன்ஷிப்  கோப்பையை வென்றது. பிகேஆர் அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. 
போட்டியில் தற்காப்பு விளையாட்டில் சிறப்பாக விளையாடிய பிகேஆர் கல்லூரி மாணவி தாமரைக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளையும், கபடி பயிற்சியாளர் எஸ்.பி.பழனிசாமியையும், கல்லூரிச் செயலர் மற்றும் தாளாளர் பி.என்.வெங்கடாசலம், கல்லூரி முதன்மையாளர் ஜெகதா லட்சுமணன், முதல்வர் மைதிலி, துணை முதல்வர் எஸ்.ஏ.தனலட்சுமி மற்றும் பேராசிரியைகள் ஆகியோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT