ஈரோடு

பர்கூர் வனத்தில்  யானை தாக்கியதில் விவசாயி காயம்

அந்தியூரை அடுத்த பர்கூர் வனப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி காயமடைந்தார். 

DIN

அந்தியூரை அடுத்த பர்கூர் வனப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி காயமடைந்தார். 
பர்கூரை அடுத்த துருசனாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் போலன் (49). விவசாயி. இவர், தம்புரெட்டி பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் துருசனாம்பாளையத்துக்கு செவ்வாய்க்கிழமை  திரும்பிக் கொண்டிருந்தார். தாமரைக்கரை குளம் அருகே வந்தபோது அந்த வழியே வந்த காட்டு யானை, போலனைத் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த போலன் கூச்சலிட்டார். இதனைக் கேட்ட அப்பகுதியினர் யானையை விரட்டியதோடு, போலனை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து, அந்தியூர் வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT