ஈரோடு

மொடக்குறிச்சி, கொடுமுடியில் சாரல் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

DIN

மொடக்குறிச்சி, கொடுமுடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை முதல் இரவு வரை சாரல் மழை பெய்தது.
தமிழகத்தில் கடும் வறட்சியால் குளம், குட்டைகள், ஏரிகள் காய்ந்து குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழக அரசு மழைநீர் சேகரிக்கவும், நீர்நிலைகளை மேம்படுத்தவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. 
இந்நிலையில் மொடக்குறிச்சி, கொடுமுடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுகிழமை இரவு 11மணி முதல் 12 மணிவரை லேசான மழை ஆங்காங்கே பெய்தது. 
தொடர்ந்து மொடக்குறிச்சி, கொடுமுடி, சிவகிரி, அரச்சலூர், அவல்பூந்துறை, கணபதிபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. திங்கள்கிழமை மதியம்  பெய்யத் தொடங்கிய மழை மாலையில் சாரலானது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT