ஈரோடு

வார்டு மறுவரையறைக்கு எதிர்ப்பு : பேரூராட்சி அலுவலகத்தில் போராட்டம்

DIN

கொடுமுடி அருகே உள்ள வொங்கம்பூர் பேரூராட்சிக்கு உள்பட்ட காசிபாளையத்தில் வார்டு மறுவரையறை செய்வதை கண்டித்து அப்பகுதி மக்கள் வெங்கம்பூர் பேரூராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர்.
 காசிபாளையத்தில் ஹிந்து, முஸ்லிம், பட்டியலினத்தவர்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 2,3 ஆகிய வார்டுகளில் உள்ள 400 வாக்காளர்களைப் பிரித்து 4ஆவது வார்டில் சேர்த்துள்ளதால் அப்பகுதி மக்களிடையே மத ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் கருத்து வேறுபாடும்,பிரச்னைகளும் எழும் நிலை ஏற்பட்டுள்ளது.
 எனவே 2, 3ஆவது வார்டுகளைச் சேர்ந்த வாக்காளர்களை 4ஆவது வார்டில் சேர்ப்பதை பேரூராட்சி நிர்வாகம் கைவிட வலியுறுத்தி, காசிபாளைத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தின் முன் பகுதியில் அமர்ந்து செவ்வாய்க்கிழமை  போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட செயல் அலுவலர் திலகராஜ் மேல் அதிகாரிகளிடம் பேசி, இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT