ஈரோடு

ராம ஆஞ்சநேயர் கோயிலில் மகா சிவராத்திரி விழா துவக்கம்

DIN

ராம ஆஞ்சநேயர் கோயிலில் மகா சிவராத்திரி விழா துவங்கியதையடுத்து, சத்தியமங்கலம் பவானி ஆற்றில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து ஆடி வந்தனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், வடக்குப்பேட்டை ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் திருக்கோயிலில் மகா சிவராத்திரி விழா ஸ்ரீ கணபதி பூஜை, கொடியேற்றத்துடன் சனிக்கிழமை துவங்கியது. 
சிவன் அவதாரங்களில் ஒன்றான தன்னாசி சுவாமிக்கு மண் உருவச்சிலை செய்து வழிபாடுகள் நடைபெற்றன.  
அன்று இரவு நடைபெற்ற  தீர்த்தக்குடம் எடுத்தல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். 
ஞாயிற்றுக்கிழமை பவானி ஆற்றில் இருந்து சுவாமி அழைத்து வருதல் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து பக்தர்களின் காவடி ஊர்வலமும் நடைபெற்றன.  விழாவை ஒட்டி, கோயிலில் மலைவாழ் கிராம மக்களின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT