ஈரோடு

நீதிமன்ற உத்தரவு: ஈரோட்டில் 3 டாஸ்மாக் கடைகள் மூடல்

DIN

உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஈரோடு மாவட்டத்தில் 3 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. 
 ஈரோடு மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் 102 கடைகளுடன் மட்டுமே மதுக் கூடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், விளை நிலங்களில், டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
 இதன்படி தமிழகத்தில் உள்ள 110 கடைகளை அகற்ற நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. 
இதில் ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, கந்தம்பாளையம், பங்களாபுதூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த மூன்று டாஸ்மாக் கடைகள் சனிக்கிழமை முதல் மூடப்பட்டன. 
 இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: 
ஊராட்சி புன்செய் நிலத்தில் கட்டட வரைபட அனுமதி கிடைக்காததால் மூன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. 
இதனால் கடைகளின் எண்ணிக்கை 194 ஆக குறைந்துள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT