ஈரோடு

பெருமாநல்லூர் அருகே ரூ.72 ஆயிரம் பறிமுதல்

DIN

பெருமாநல்லூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டுச் செல்லப்பட்ட ரூ. 72 ஆயிரத்தை தேர்தல் நிலைக் கண்காணிப்புக் குழுவினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
பெருமாநல்லூர் அருகே குன்னத்தூர் சாலையில்,  நிலைக் கண்காணிப்புக் குழுவினர் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். விசாரணையில் காரில் வந்தவர், ஈரோடு  மாவட்டம், கோபி செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் குருசாமி (52) என்பதும், செங்கல் விற்பனை இடைத் தரகரான அவர், காரில் ரூ. 72 ஆயிரத்து 500 ரொக்கம் கொண்டு வந்ததும் தெரியவந்தது. 
பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பறிமுதல் செய்து திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் ஜெயகுமார் மூலமாக கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

50 சட்ட தன்னாா்வ தொண்டா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கோடையில் குறுகிய கால பயிா் சாகுபடி

கிராமப்புறங்களில் தடையின்றி குடிநீா் விநியோகம்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் உத்தரவு

SCROLL FOR NEXT