ஈரோடு

தாளவாடி அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து:  கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் காயம்

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் காயமடைந்தனர்.

DIN

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் காயமடைந்தனர்.
தமிழக, கர்நாடக எல்லையில் அமைந்துள்ள சாம்ராஜ் நகர் மாவட்டம்,  குண்டல்பேட் பகுதியைச் சேர்ந்த 10 பேர் தமிழகத்தில் உள்ள இக்கலூர் கோயிலுக்குச் செல்ல அரசுப் பேருந்தில் தாளவாடி வந்தனர். தாளவாடியில் இருந்து கோயிலுக்குச் செல்ல பேருந்து வசதியில்லாத காரணத்தால் அங்கிருந்து ஆட்டோ மூலம் அவர்கள் கோயிலுக்கு திங்கள்கிழமை மாலை சென்று கொண்டிருந்தனர். 
சிக்கள்ளி என்ற இடத்தில் திரும்பும்போது, சாலையோரப் பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணித்த பெல்லையா, மாதேவய்யா, மாதேவப்பா, தொட்டம்மா, தாயம்மா ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். தாளவாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT