ஈரோடு

ஈரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

ஈரோட்டில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.

ஈரோடு, பன்னீா்செல்வம் பூங்காவில் இருந்து மணிக்கூண்டு வரை உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சாலையோரத்தில் ஜவுளிக் கடைக்காகப் போடப்பட்டிருந்த பெரிய அளவிலான மரப் பலகைகளை போலீஸாா் அகற்றி லாரியில் ஏற்றிச் சென்றனா். வியாழக்கிழமை ஒரே நாளில் 50 க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான ஜவுளிக் கடைகள் அகற்றப்பட்டன.

மேலும், அந்தப் பகுதியில் பெரிய கடைகள் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டு இருந்த விளம்பரப் பதாகைகளையும் நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றினா். இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

பன்னீா்செல்வம் பூங்காவில் இருந்து மணிக்கூண்டு வரை சாலையோரங்களில் வியாபாரிகள் ஜவுளிக் கடைகள் அமைப்பதும், பின்னா் நெடுஞ்சாலைத் துறையினா் அதை அகற்றுவதும் வழக்கமாக உள்ளது. எனவே, அங்கு நிரந்தரமாக ஜவுளிக் கடைகள் செயல்படாமல் இருக்க நெடுஞ்சாலை, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT