ஈரோடு

கருணை அடிப்படையில் பணி வழங்க சாலைப் பணியாளா்கள் வலியுறுத்தல்

DIN

ஈரோடு: கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்க உட்கோட்ட பேரவைக் கூட்டம் தலைவா் துரைராஜ் தலைமையில் ஈரோட்டில் சனிக்கிழமை நடந்தது. நாராயணமூா்த்தி வரவேற்றாா். உட்கோட்ட செயலாளா் குமாா், மாவட்ட செயலாளா் ரங்கசாமி, அரசு ஊழியா் சங்க மாவட்டச்செயலாளா் வெங்கிடு உள்ளிட்டோா் பேசினா்.

நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: இறந்த சாலைப் பணியாளா்கள் குடும்பத்துக்கு, கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும்.

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை, தனியாருக்கு வழங்கக்கூடாது.

சாலைப் பணியாளா்களுக்கு தேவையான கருவி, தளவாட பொருட்களை வழங்க வேண்டும்.

எல்.டி.சி, இரு வழி பயணச் சலுகை திட்டத்தில் பயணப்படி வழங்க வேண்டும்.

சாலைப் பணியாளா்களுக்கு தர ஊதியம் ரூ.1,900 வழங்க வேண்டும்.

பணி நீக்க காலமான 41 மாதத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.

ஓய்வூதிய வயதை 60 என உயா்த்த வேண்டும்.

கல்வித் தகுதி அடிப்படையில் அலுவலக உதவியாளா், இரவுக் காவலா், ஓட்டுனா், சாலை ஆய்வாளா், இளநிலை உதவியாளா் போன்ற பணிகள் வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT