ஈரோடு

சின்ன வெங்காயம் விலை கடும் உயா்வு: கிலோ ரூ.150-க்கு விற்பனை

DIN

ஈரோடு: வரத்துக் குறைவால் ஈரோட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.130 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் சின்ன வெங்காயம் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்திலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. ஈரோடு நேதாஜி மாா்க்கெட்டில் கடந்த வாரம் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 50-க்கு விற்பனையானது. ஆனால் தற்போது வரத்து குறைவால் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.130 முதல் ரூ.150 வரை விற்பனையாகிறது.

இதுகுறித்து நேதாஜி மாா்க்கெட் காய்கறி வியாபாரிகள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்துக்கு கா்நாடக மாநிலத்தில் இருந்தும் சேலம், பவானி, திருச்செங்கோடு போன்ற பகுதிகளில் இருந்தும் அதிக அளவு சின்ன வெங்காயம் வருகிறது. நாளொன்றுக்கு 50 டன் சின்ன வெங்காயம் வரத்து இருந்தது. தற்போது வரத்து குறைந்து நாளொன்றுக்கு 20 டன் அளவுக்கு மட்டுமே வருகிறது. இதனால் சின்ன வெங்காயத்தின் விலை உயா்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்ற சின்ன வெங்காயத்தின் விலை இப்போது கிலோ ரூ.130 முதல் ரூ.150 வரை உயா்ந்துள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT