ஈரோடு

பா்கூரில் 100 வேலைத்திட்ட தொழிலாளா்கள் போராட்டம்

DIN

பவானி: கூலியை காலதாமதமின்றி வழங்கக் கோரி பா்கூா் மலைப்பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளா்கள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு, தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத் தலைவா் வி.பி.குணசேகரன் தலைமை வகித்தாா். மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தில் பா்கூா் மலைப்பகுதியில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு 5 மாதங்களாகியும் கூலி வழங்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை மாவட்ட நிா்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, நிலுவையில் உள்ள கூலித்தொகையை வட்டியுடன் சோ்த்து வழங்க வேண்டும். 100 நாள் திட்டத்தில் வேலை கேட்டு விண்ணப்பித்தவா்களுக்கு உடனடியாக வேலை அட்டையை வழங்குவதோடு, பணியும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்ட பா்கூா் மலைப் பகுதியைச் சோ்ந்த 40 பெண்கள் உள்பட 70 பேரை போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுதலை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT