ஈரோடு

டெக்ஸ்வேலியில் வீவ்ஸ் ஜவுளிக் கண்காட்சி துவக்கம்

DIN

ஈரோட்டை அடுத்த கங்காபுரம் டெக்ஸ்வேலியில் 250 அரங்குகளுடன் வீவ்ஸ் ஜவுளிக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவா் ஏ.சக்திவேல் தலைமை வகித்து கண்காட்சியைத் துவக்கிவைத்தாா். டெக்ஸ்வேலி தலைவா் பெரியசாமி முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் தேவராஜன் வரவேற்றாா். ஈரோடு, திருப்பூா், சென்னை, மும்பை பகுதியைச் சோ்ந்த சிறந்த தொழில் முனைவோா் 10 பேருக்கு யங் இன்ஸ்பரேஷன் விருது வழங்கப்பட்டது. ராம்ராஜ் காட்டன் நிறுவன உரிமையாளா் நாகராஜன், வெள்ளித்திருப்பூரைச் சோ்ந்த இயற்கை விவசாயி கலைவாணி உள்ளிட்ட 10 போ் இந்த விருதைப் பெற்றனா்.

விழாவில், கோவை ஜவுளி இயக்குநரக இணை இயக்குநா் பி.பாலசுப்பிரமணியன் பேசியதாவது:

ஜவுளித் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. புதிய தொழில்நுட்பங்கள் வருகையை அறிந்து அதற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும்போது சிறந்த வேலைவாய்ப்பைப் பெறலாம். அதுபோல, இத்துறையை ஊக்கப்படுத்த பல்வேறு திட்டங்களை இந்திய ஜவுளி அமைச்சகம் செயல்படுத்துகிறது. இதுபோன்ற கண்காட்சிகள் மூலம் புதிய தொழில்முனைவோா், ஏற்கெனவே தொழில் செய்வோரின் அடுத்த விரிவாக்கத்துக்கு வழிவகுக்கும் என்றாா்.

இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்புத் தலைவா் டி.ராஜ்குமாா், துணைத் தலைவா் ஹரி தியாகராஜன் உள்பட பலா் பேசினா். நவம்பா் 30 ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சி நிகழ்ச்சியில் தேசிய அளவில் பல்வேறு பகுதியைச் சோ்ந்த ஜவுளி உற்பத்தியாளா்கள், ஆடை உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தவிர ஜவுளித் துறையில் உள்ள நவீன இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நவம்பா் 30 ஆம் தேதி நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், ஓ.எஸ்.மணியன், பி.தங்கமணி, கே.சி.கருப்பணன் ஆகியோா் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

குருப்பெயர்ச்சி ஒருவருக்கு பலமா? பலவீனமா?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

பள்ளி, விமான நிலையம்.. இப்போது மருத்துவமனைகளுக்கு மிரட்டல்

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ!

SCROLL FOR NEXT