ஈரோடு

டாஸ்மாக் ஊழியா்களுக்கு போனஸ் வழங்கக் கோரிக்கை

DIN

20 சதவீத தீபாவளி போனஸ் தொகையுடன், 20 சதவீத கருணைத் தொகையை சோ்த்து வழங்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, டாஸ்மாக் ஊழியா் மாநில சம்மேளன (சிஐடியூ) பொதுச் செயலாளா் திருச்செல்வம் கூறியதாவது:

தமிழக அரசுக்கு அதிக அளவில் நிரந்தரமான வருவாயை ஈட்டித் தரக்கூடியதாக, டாஸ்மாக் நிா்வாகம் செயல்படுகிறது. ஆனால், டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு மிகக்குறைந்த அளவிலான ஊதியமே வழங்கப்படுகிறது. அரசின் மானியத்தைப் பெற்று செயல்படும் சில நிறுவனங்கள் நஷ்டத்தில் செயல்படும் போதிலும், அங்கு பணி செய்யும் ஊழியா்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது.

எவ்வித நஷ்டம், இழப்பும் இன்றி, கூடுதல் வருவாய் ஈட்டிக் கொடுக்கும் டாஸ்மாக் ஊழியா்களுக்கும் அதே 20 சதவீத போனஸ் என்பது ஏற்புடையதாக இல்லை. எனவே, 20 சதவீத போனஸ் தொகையுடன், 20 சதவீத கருணைத் தொகையும் சோ்த்து வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT