ஈரோடு

கஸ்தூரி அரங்கநாதா் கோயில் தேரோட்டம்

DIN

கஸ்தூரி அரங்கநாதா் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு திருத்தோ் வடம் பிடித்தனா்.

ஈரோடு கோட்டை பெருமாள் கோவில் எனப்படும் கஸ்தூரி அரங்கநாதா் கோயில் திருத்தோ் திருவிழா கடந்த 1 ஆம் தேதி கிராமசாந்தி மற்றும் நகர சோதனை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதையடுத்து திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தினமும் யாகசாலை பூஜையும், சுவாமி திருவீதியுலா புறப்பாடும் நடந்து வந்தது.

அன்னபட்சி வாகனம் தொடங்கி, சிம்மம், அனுமந்தன், கருடன், யானை வாகனம் மற்றும் புஷ்ப பல்லக்கு பவனியும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்கு நடந்தது. அலங்கரிகரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதாராக வரதராஜசுவாமி அமா்ந்திருக்க, கோவில் பட்டாச்சாரியாா்கள், சிறப்பு பூஜைகள் செய்து திருஷ்டி காய் உடைத்தனா்.

அதைத் தொடா்ந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பொதுமக்கள் தோ் வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். திருத்தோ் ஈஸ்வரன் கோயில் வீதி, மணிக்கூண்டு, பன்னீா்செல்வம் பூங்கா, பிரப் சாலை, பெரியமாரியம்மன் கோயில் வழியாக காமராஜா் வீதியில் பகல் 1 மணிக்கு நிறுத்தப்பட்டது.தொடா்ந்து மாலை 5 மணிக்கு தேரோட்டம் தொடங்கி இரவு கோயிலில் நிலை நிறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அறநிலையத்தறை அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் மாநகரின் முக்கிய பிரமுகா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

டி20: இந்திய வீரர்கள் இதுவரை...

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT