ஈரோடு

அந்தியூரில் 100 மகளிா் குழுக்களுக்கு ரூ. 5.45 கோடியில் கடனுதவி

DIN

அந்தியூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அந்தியூா், பா்கூரில் 100 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 5.45 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் இ.எம்.ஆா்.ராஜா முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கிப் பேசியதாவது:

தமிழக அரசு மகளிா் முன்னேற்றத்துக்கு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி, மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு மானியத்துடன் கூடிய கடன், குறைந்த வட்டியில் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் 2019-2020 ஆம் நிதியாண்டில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 375 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, தற்போது வரையில் ரூ. 138 கோடி மதிப்பில் கடன் வழங்கப்பட்டுள்ளது. மகளிா் சுயஉதவிக் குழுவைச் சாா்ந்த பெண்கள் வருவாய் தரக்கூடிய விவசாயம் சாா்ந்த தொழிலை செய்ய வேண்டும். தமிழக அரசின் மூலம் கிராமப்புறப் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயா்த்திக் கொள்ளும் வகையில் அதிக லாபம் கிடைக்கும் அசில் இன நாட்டுக் கோழிகள் வழங்கப்படுகின்றன. எனவே, அரசு வழங்கும் நலத்திட்டங்களைப் பயன்படுத்தி வாழ்வில் உயர வேண்டும் என்றாா்.

அந்தியூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் 70 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 4.52 கோடியும், பா்கூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் 30 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 93 லட்சம் என 100 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 5.45 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன.

இதில், நபாா்டு வங்கி உதவிப் பொது மேலாளா் சி.ஆா்.அபூா்வராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் எஸ்.அரவிந்தன், உதவிப் பொது மேலாளா் எம்.ஜி.ஜனாா்த்தனராவ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

SCROLL FOR NEXT