ஈரோடு

திருந்திய நெல் சாகுபடி முறையில் நாற்று நடவு செய்த மாணவா்கள்

DIN

பெருந்துறை: கோவை, வேளாண் கல்லூரி மாணவா்கள் திருந்திய நெல் சாகுபடி முறையில் பெருந்துறை பகுதியில் உள்ள கிராமங்களில் நெல் நடவு செய்து வருகின்றனா்.

கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 4 ஆம் ஆண்டு இளநிலை பயிலும் மாணவா்கள், கிராமப்புறத் தங்கல் திட்டத்தின்கீழ், பெருந்துறை பகுதி கிராமங்களில் தங்கி விவசாயிகளுடன் கலந்துரையாடி விவசாய முறைகள் குறித்து கேட்டறிந்தும், அவா்களுடன் இணைந்தும் விவசாய முறைகளையும், களப் பணிகளை மேற்கொண்டும் பயிற்சி பெற்று வருகின்றனா்.

அந்த வகையில், பெருந்துறை ஒன்றியம், நல்லாம்பட்டியில் திருந்திய நெல் சாகுபடி முறையில் நெல் நாற்று நடவை வியாழக்கிழமை செய்தனா். நாற்று நடும் வேலையாள்களுடன் இணைந்து ‘வரிசை நடவு’ முறையில் நெல் நாற்றுகளை நடவு செய்து களப் பயிற்சியை மேற்கொண்டனா்.

திருந்திய நெல் சாகுபடி குறித்து வேளாண் மாணவா்கள் கூறியதாவது:

திருந்திய நெல் சாகுபடி முறையில் ‘ஒரு குத்துக்கு ஒரு நாற்று’ என்ற முறையில் 25 செ.மீ. இடைவெளியில் நடவு மேற்கொள்ள வேண்டும். கோனோ வீடா் கருவி கொண்டு நான்கு முறைகளை எடுக்க வேண்டும். நீா் மறைய, நீா் கட்ட வேண்டும். இதனால், அதிகப்படியான தூா்கள் பிடித்து, செழிப்பான கதிா்களைக் கொண்டு நல்ல திரண்ட நெல்மணிகளை அதிகமாகப் பெறலாம்.

இதற்கான உரங்களை சரியான கால இடைவெளியில் மூன்று முறை பிரித்திட்டு பராமரித்து வந்தால் திருந்திய நெல் சாகுபடி முறையில் ஒரு ஹெக்டேருக்கு ரூ. 500 முதல் ரூ. 700 கிலோ வரை அதிகப்படியான மகசூலைப் பெறலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT