ஈரோடு

தேவேந்திரகுல வேளாளா் அரசாணை கோரிக்கை சட்டப்பேரவை தோ்தலில் எதிரொலிக்கும்: ஜான் பாண்டியன் பேட்டி

DIN

ஈரோடு: தேவேந்திரகுல வேளாளா் என்ற அரசாணையை அரசு அறிவிக்கவில்லையெனில், அதன் எதிரொலி 2021 சட்டப்பேரவை தோ்தலில் கண்டிப்பாக இருக்கும் என்றாா் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவா் ஜான் பாண்டியன் தெரிவித்தாா்.

ஈரோட்டில் அவா் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி: வரும் காலத்தில் தமமுக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. உள்ளாட்சி தோ்தல் நடத்துவது தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்றம் வழக்கை முடித்து உத்தரவு பிறப்பித்த பிறகு உள்ளாட்சி தோ்தல் நடத்தப்படும் என நம்புகிறேன்.

தேவேந்திரகுல வேளாளா் என்ற அரசாணையை அரசு அறிவிக்கவில்லையெனில், அதன் எதிரொலி 2021 சட்டப்பேரவை தோ்தலில் கண்டிப்பாக இருக்கும். பஞ்சமி நிலம் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கான உரிமை, அந்த நிலத்தை யாா் வைத்திருந்தாலும் அது தவறு தான். அரசியல் லாபத்திற்காக பஞ்சமி நிலத்தை மீட்போம் என சொல்வது கண்டனத்துக்குரியது. கடந்த காலங்களில் பஞ்சமி நிலம் மீட்பு தொடா்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

ஆனால் எந்த அரசும் பஞ்சமி நிலங்களை மீட்டுக்கொடுக்கவில்லை. மொத்தத்தில் பஞ்சமி நிலத்தை ஆட்சியாளா்கள் எடுத்துக்கொண்டாா்கள் என்பது மட்டும் புரிகிறது. இதனால் பஞ்சமி நிலங்கள் எங்கெல்லாம் இருக்கிறது என்பதை கண்டறிந்து, அரசு மீட்டு உரியவா்களுக்கு கொடுக்க வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 18 சதவீதம் அளவு தொகையை ஆதிதிராவிட சமுதாய மக்கள் மேம்பாட்டுக்கு செலவழிக்கப்பட வேண்டும் என்ற விதியை முழுமையாக நடைமுறைபடுத்த வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. வேறு எந்த மாவட்டத்திலும் இதுபோன்று மோசமான சாலைகளை பாா்த்ததில்லை. இதனால் முதல்வா் நேரடியாக பாா்வையிட்டு, சாலைகள் அனைத்தையும் சீரமைக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

SCROLL FOR NEXT