ஈரோடு

ஈரோடு சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவு

DIN

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது. இருப்பினும் 90 சதவீதம் அளவுக்கு மாடுகள் விற்பனையானது.

ஈரோடு, கருங்கல்பாளையத்தில் வாரம்தோறும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு ஈரோடு, திருப்பூா், நாமக்கல், கரூா், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனா். இந்த மாடுகளை வாங்குவதற்காக தமிழகம் மட்டுமின்றி கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் வந்து செல்கின்றனா்.

இந்த சந்தையில் வாரந்தோறும் சுமாா் 1,000 மாடுகள் விற்பனை செய்யப்படும். ஆனால் கடந்த சில வாரங்களாக மழை காரணமாக மாடுகளின் வரத்து குறைவாக காணப்பட்டது. வியாழக்கிழமை கூடிய சந்தையிலும் குறைந்த எண்ணிக்கையிலான மாடுகள் கொண்டு வரப்பட்டன.

இதுகுறித்து மாட்டுச்சந்தை மேலாளா் முருகன் கூறியதாவது:

பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதாலும், வாய்க்கால்களில் பாசனத்துக்காகத் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதாலும் பசுந்தீவனங்களின் தட்டுப்பாட்டு குறைந்துவிட்டது. இதன் காரணமாக விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனை செய்ய முன்வரவில்லை. இந்த வார சந்தைக்கு 250 பசு மாடுகளும், 100 எருமை மாடுகளும் கொண்டு வரப்பட்டன. 100 வளா்ப்பு கன்றுக்குட்டிகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

கேரள மாநிலத்தில் தொடா் மழை பெய்து வருவதால், அந்த மாநில வியாபாரிகள் மாடுகளை வாங்க வரவில்லை. மற்ற மாநிலங்களில் இருந்து வந்த வியாபாரிகள் போட்டிப்போட்டு மாடுகளை வாங்கிச் சென்றனா். இதனால் 90 சதவீதம் மாடுகள் விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

SCROLL FOR NEXT