ஈரோடு

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

DIN

பெருந்துறை நகரில் பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை பேரூராட்சி, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி, சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரி, ஜே.சி.ஐ. எலைட் சங்கம், மத்திய ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய பேரணியை, சட்டப் பேரவை உறுப்பினர்  தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் துவக்கி வைத்தார். 
பெருந்துறை காவல் நிலையத்தில் தொடங்கிய பேரணி, அரசு மருத்துவமனை, பெருந்துறை பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை, கொங்கு நகர், பெத்தாம்பளையம் பிரதான சாலை வழியாகச் சென்று விநாயகர் கோயில் அருகில் நிறைவடைந்தது. இதில், பெருந்துறை காவல் ஆய்வாளர் சரவணன், பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.கிருஷ்ணன், சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரித் தாளாளர் கே.சி.முத்துசாமி, ரோட்டரி கிளப் தலைவர் என்.விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT