முகப்பு
ஈரோடு

பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா 

சித்தோடு அருகே உள்ள எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 6:53 AM
பகிர்:

சித்தோடு அருகே உள்ள எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 

இவ்விழாவுக்கு, கல்லூரித் தலைவர் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தார். பொருளாளர் வி.ஆர்.முருகன், இணைச் செயலாளர்கள் ச.வசந்தி சத்யன், ரா.பரிமளாராஜா, முதல்வர் எம்.ராமமூர்த்தி, துணை முதல்வர் இரா.சண்முகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், ஒவ்வொரு துறை சார்ந்தும் மாணவர்களால் தனித்தனியே பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாட்டு வண்டி நடனம், கும்மியாட்டம், சலங்கையாட்டம், உரியடித்தல், கயிறு இழுத்தல், கோலமிடுதல், உணவு உண்ணுதல், மலர் தொடுத்தல் ஆகிய போட்டிகள் மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட்டன.
போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments