ஈரோடு

ஈரோட்டில் நுங்கு விற்பனை அமோகம்

DIN

பழச்சாறு கடைகள் இல்லாத நிலையில், ஈரோடு பகுதியில் வெயிலுக்கு இதமான நுங்கு விற்பனை அமோகமாக உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஜனவரி மாத இறுதி முதல் கடும் வெயில் நிலவி வருகிறது. தற்போது வெயில் வாட்டுவதுடன் ஊரடங்கால் கடை, பேக்கரி, பழக்கடைகள் இல்லாததால் பழச்சாறு குடிப்பதற்கான வழிகள் இல்லை. இந்நிலையில், ஈரோடு பெரியாா் நகா், சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பு, லோட்டஸ் மருத்துவமனை பிரிவு உள்பட பல்வேறு இடங்களில் நுங்கு விற்பனை துவங்கி உள்ளது.

இதுகுறித்து, நுங்கு விற்பனையாளா் தா்மராஜ் கூறியதாவது:

கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் அந்தியூா், கொடுமுடி, மொடக்குறிச்சி, வெள்ளகோவில், காங்கேயம் போன்ற பகுதிகளில் இருந்து அதிகமாக நுங்கு வருகிறது. வழக்கத்தைவிட சற்று பெரிய அளவாக நுங்கு உள்ளதால் மக்கள் விரும்பி வாங்குகின்றனா்.

ஊரடங்கு உத்தரவால் காலை 6 முதல் 10 மணி வரை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என கட்டுப்பாடு விதித்துள்ளனா். இருப்பினும் காய்கறிச் சந்தைக்கு செல்பவா்கள், கடை வீதிக்கு வருவோா் அதிகமாக வாங்கிச் செல்கின்றனா். தற்போது வெயில் அதிகமாக வாட்டுவதால் நுங்கு உடலுக்கு ஏற்றது என்பதால் ஏராளமானோா் வாங்கிச் செல்கின்றனா்.

பெரிதாக உள்ள இரண்டு கண் உடைய நுங்கு 10 ரூபாய், மூன்று கண் உடையது 15 ரூபாய் என்ற விலையில் விற்கிறோம். வரத்து அதிகமானால் மூன்று கண் நுங்கு பத்து ரூபாய்க்கு குறையும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: பிரேமலதா கோரிக்கை

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது: எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

பாதுகாப்பான பயண சேவை: அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு

SCROLL FOR NEXT